"விதவிதமாக புகைப்பட ஆல்பங்களை பார்ப்பது எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும்,” என்கிறார் புகைப்படக்கலைஞர் சபரிதா. இவர் முதுகலை சமூகப்பணிக் கல்வி படித்தவர். சென்னையில் உள்ள கூகை நூலகம் சார்பில் நடந்த புகைப்படப்ப யிற்சியில் கலந்துக்கொண்டபோது அங்கேதான் இக்கலையைப் புரிந்துகொண்டதாகச் சொல்கிறார். ’தெருவில் படம் எடுக்கிறோம்; மக்களை எடுக்கிறோம்; யாரை எடுத்தாலும் உரையாடல் ரொம்ப முக்கியம்; மக்களோடு கலந்துரையாடி புகைப்படம் எடுத்தால் அந்த அனுபவமே தனிதான்”, என்கிறார் சபரிதா. பெண்களுக்கு எதிரான வன்முறையைப் புகைப்படங்களாக பதிவு செய்யும் இவரது முயற்சியைப் பாராட்டி சம்யாக் திருஷ்டி என்ற அமைப்பும், தெற்காசியா புகைப்பட அமைப்பும் நிதி நல்கை வழங்குவத ற்கு இவை ரத் தெ ரிவு செய்துள்ளன. மக்களின் வாழ்வியலைத் தொடர்ந்து பதிவு செய்கிறது சபரிதாவின் காமிரா. --மா.கண்ணன்
டிசம்பர், 2020.